தவெக-வை அழைக்காதது ஏன்? கவர்னருக்கு சுப்பிரமணிய சுவாமி கேள்வி

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது தமிழக வெற்றி கழகம்.
தவெக-வை அழைக்காதது ஏன்? கவர்னருக்கு சுப்பிரமணிய சுவாமி கேள்வி
Published on

சென்னை,

பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விடுத்துள்ள கோரிக்கையில், நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை உடனடியாக அழைத்து ஆட்சி அமைக்க உத்தரவிட வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தினார்.

தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மதித்து தவெக கட்சிக்கு கவர்னர் முன்னுரிமை அளிக்க வேண்டும் இல்லையெனில் நீதிமன்றத்தை அணுக நேரிடும் என்றும் சுவாமி எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com