ஜனநாயக கடமையாற்றுவதில் ஆண்களை பின்னுக்கு தள்ளிய பெண்கள்!

ஜனநாயக கடமையாற்றுவதில் ஆண்களை பெண்கள் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்திருக்கிறார்கள்.
ஜனநாயக கடமையாற்றுவதில் ஆண்களை பின்னுக்கு தள்ளிய பெண்கள்!
Published on

சென்னை,

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 பேர் தகுதி பெற்றிருந்தனர். இதில், ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 728 பேர்.

தமிழகத்தில் கடந்த 1952-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல்களில், அதாவது 74 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில் இல்லாத வகையில் முதன்முறையாக நேற்று நடைபெற்ற தேர்தலில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

குறிப்பாக, ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிகம் பேர் வாக்களித்து இருந்தனர். அதாவது, 85.76 சதவீத பெண்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர். ஆண்களை பொறுத்தமட்டில், 83.57 சதவீதம் பேர் வாக்களித்து இருந்தனர். இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் 2.19 சதவீதம் ஆகும்.

மொத்தத்தில், ஜனநாயக கடமையாற்றுவதில் ஆண்களை பெண்கள் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்திருக்கிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com