அரசின் அறிவிப்புகளை செயல்வடிவுக்கு கொண்டுவர வேண்டும்

புதுவையில் அரசின் அறிவிப்புகளை செயல்வடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று உறுதிமொழிக்குழு கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.
அரசின் அறிவிப்புகளை செயல்வடிவுக்கு கொண்டுவர வேண்டும்
Published on

புதுச்சேரி

அரசின் அறிவிப்புகளை செயல்வடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று உறுதிமொழிக்குழு கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.

உறுதிமொழிக்குழு

புதுவை சட்டமன்ற அரசாங்க உறுதிமொழிகள் குழுக்கூட்டம் கமிட்டி அறையில் இன்று நடந்தது. சபாநாயகர் செல்வம் மேற்பார்வையில் நடந்த இந்த கூட்டத்துக்கு உறுதிமொழிக்குழு தலைவர் நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, ஏ.கே.டி.ஆறுமுகம், சிவசங்கரன், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு, சட்டசபை செயலாளர் தயாளன், அரசு செயலாளர் கேசவன், சமூக நலத்துறை இயக்குனர் குமரன், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

செயல் வடிவம்

அப்போது, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், லஞ்ச ஒழிப்பு, பொதுநிர்வாகம், நகர மற்றும் கிராம அமைப்பு, ஆதிதிராவிடர் நலம், உள்துறை போன்ற துறைகளில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சட்டசபையில் அறிவித்த நலத்திட்ட உறுதிமொழிகளை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், அரசின் அறிவிப்புகளை விரைவில் செயல்வடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com