தொற்று குறைந்தாலும், பலி குறையவில்லை: கொரோனாவுக்கு ஒரே நாளில் 20 பேர் பலி 402 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 20 பேர் பலியானார்கள்.
தொற்று குறைந்தாலும், பலி குறையவில்லை: கொரோனாவுக்கு ஒரே நாளில் 20 பேர் பலி 402 பேர் பாதிப்பு
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழக அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கையின் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தாலும், பலியாகி வருவோரின் எண்ணிக்கை குறையவில்லை. இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 402 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 6 ஆயிரத்து 982 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 631 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 2,780 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,571 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 20 பேர் இறந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com