

ஆலந்தூர்,
சென்னையை அடுத்த திருநீர்மலை பகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில், வீடுகளில் வளர்க்க பொது மக்களுக்கு நிலவேம்பு செடிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு பா.ஜனதா தேசியக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேதாசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வீடுகளில் வளர்க்க பொதுமக்களுக்கு நிலவேம்பு செடிகளை வழங்கினார். இதில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வருவதை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 7 பேர், அவருக்கு கருப்பு கொடி காட்ட அங்கு தயாராக நின்று இருப்பதை போலீசார் அறிந்தனர். உடனடியாக அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.