இன்று நடக்கிறது பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
இன்று நடக்கிறது பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:

பொது வினியோக திட்ட முகாம்

பொது வினியோக திட்டம் சிறப்பாக நடைபெற சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

ஸ்மார்ட் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்ற குறைகள் முகாமிலேயே சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் ஸ்மார்ட் கார்டில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்து தரப்படும். பொது வினியோக திட்டம் தொடர்பான குறைகளையும் முகாமில் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெறலாம்.

மேற்பார்வை அலுவலர்கள்

தூத்துக்குடி தாலுகாவில் நடக்கும் கூட்டத்துக்கு தூத்துக்குடி உதவி கலெக்டரும், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் தாலுகாக்களுக்கு தூத்துக்குடி தனித்துணை ஆட்சியரும் (சமூக பாதுகாப்பு திட்டம்), திருச்செந்தூர் தாலுகாவிற்கு திருச்செந்தூர் உதவி கலெக்டரும், சாத்தான்குளம் தாலுகாவிற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும், கோவில்பட்டி தாலுகாவிற்கு கோவில்பட்டி உதவி கலெக்டரும், ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரும், விளாத்திகுளம் தாலுகாவிற்கு தூத்துக்குடி மாவட்ட வழங்கல் அலுவலரும், எட்டயபுரம் தாலுகாவிற்கு மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளரும் (நிலம்), கயத்தாறு தாலுகாவிற்கு கலால் உதவி ஆணையரும் மேற்பார்வை அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் குறைகள் இருப்பின் அதுகுறித்து இந்த சிறப்பு முகாமில் மனு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com