லித்தியம் அதிகம் கொண்ட நாடுகள்

பொலிவியா நாடுதான் உலகிலேயே அதிக அளவிலான லித்தியம் வளங்களை கொண்டுள்ளது.
லித்தியம் அதிகம் கொண்ட நாடுகள்
Published on

மின்சார வாகனங்கள், மின் உபயோகப் பொருட்கள் செயல்பாட்டுக்கு லித்தியம் பேட்டரி முதன்மை மூலப்பொருளாக விளங்குகிறது. உலகின் ஒரு சில நாடுகளில்தான் லித்தியம் அதிக அளவில் இருக்கிறது. சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லித்தியம் கண்டெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் லித்தியம் வளம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு தரவுகளின்படி, பொலிவியா நாடுதான் உலகிலேயே அதிக அளவிலான லித்தியம் வளங்களை கொண்டுள்ளது. அங்கு 21 மில்லியன் டன் லித்தியம் காணப்படுகிறது. அர்ஜென்டினாவில் 20 மில்லியன் டன்கள் லித்தியம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது உலகின் இரண்டாவது பெரிய லித்தியம் கையிருப்பாகும். 12 மில்லியன் டன் லித்தியம் கை இருப்புகளுடன் அமெரிக்கா, 3-வது இடத்தில் உள்ளது. சிலி நாட்டில் 11 மில்லியன் டன்கள் லித்தியம் உள்ளது. இது அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக லித்தியம் கொண்ட நாடாக 4-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 7.9 மில்லியன் டன் லித்தியம் இருப்புடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

சீனா 6.8 மில்லியன் டன் லித்தியம் இருப்புடன் 6-வது இடத்தில் உள்ளது. சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்தியா உலக அளவில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஜெர்மனியில் 3.2 மில்லியன் டன் லித்தியம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com