கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புதுவையில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

புதுச்சேரி

புதுவையில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகள்

புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதே போல் ஞாயிற்றுக்கிழமையான இன்று புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, கடற்கரை, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச், சின்ன வீராம்பட்டினம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர்.

போக்குவரத்து நெரிசல்

புதுச்சேரி பழைய துறைமுகம் முதல் தலைமை செயலகம் வரை உருவாகியுள்ள செயற்கை மணல் பரப்பிலும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர். புதுச்சேரி நகர பகுதியில் ஏராளமான வெளிமாநில பதிவெண் கொண்ட கார்கள் உலா வந்தன. நகரின் முக்கிய சாலைகளான 100 அடி சாலை, அண்ணாசாலை, நேருவீதி, புஸ்சி வீதி, கடலூர் சாலை, மரப்பாலம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

சண்டே மார்க்கெட்

சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் காலை முதல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் அது மேலும் அதிகரித்தது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com