

மதுரை,
தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட மதுரை மற்றும் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16128) வருகிற 11-ந் தேதி, 13, 14-ந் தேதி, 16-ந் தேதி, 18, 19-ந் தேதி, 21-ந் தேதி, 23-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை, அடுத்த மாதம் 3-ந் தேதி ஆகிய நாட்களில் எர்ணாகும், ஆலப்புழை வழியாக செல்வதற்கு பதிலாக கோட்டயம், செங்கனச்சேரி, திருவல்லா, செங்கனூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில், சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16127) நாளை (வியாழக்கிழமை), வருகிற 7-ந் தேதி, 12-ந் தேதி, 17-ந் தேதிகளில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்படும். நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16352) நாளை, 8-ந் தேதி, 12-ந் தேதி, 15-ந் தேதி, 19-ந் தேதி, 22-ந் தேதி மற்றும் 26-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும்.
கன்னியாகுமரி-ஹவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12666) வருகிற 7-ந் தேதி, 14-ந் தேதி, 21-ந் தேதி மற்றும் 28-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16128) நாளை, 5-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை, 11-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை, 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை, 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை விருதுநகரில் இருந்து மதுரைக்கு பதிலாக மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும்.
கன்னியாகுமரி-ஐதராபாத் வாராந்திர சிறப்பு ரெயில் (வ.எண்.07229) வருகிற 6-ந் தேதி, 13-ந் தேதி, 20-ந் தேதி மற்றும் 27-ந் தேதிகளில் விருதுநகரில இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.