மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் அருகே கனிம வளத்துறை தனி வருவாய் அதிகாரி சந்திரமோகன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மறித்தார். அதிகாரியை கண்டதும் டிராக்டரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். தொடர்ந்து டிராக்டரை சோதனை செய்து பார்த்த போது அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த கிருஷ்ணன்கோவில் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com