மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்

தளவாய்புரம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்
Published on

தளவாய்புரம்,

தளவாய்புரம் அருகே புத்தூர் சாலையில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வருவாய் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா தலைமையில் ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன், சேத்தூர் வருவாய் ஆய்வாளர் அமிர்தராஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புத்தூர் சாலையில் செங்கல் சூளைக்கு பயன்படும் மணலை அள்ளிக் கொண்டு ஒரு டிராக்டர் வந்தது. அதை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த டிராக்டரை பறிமுதல் செய்து தளவாய்புரம் போலீசில் ஒப்படைத்தனர். இதுபற்றி தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com