விஷம் குடித்து வியாபாரி தற்கொலை

பேரளம் அருகே விஷம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து வியாபாரி தற்கொலை
Published on

நன்னிலம்:

பேரளம் அருகே உள்ள குருங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது47). பால் வியாபாரி. இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமானதால் பூச்சிமருந்தை(விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராமமூர்த்தி மகன் ராஜபாண்டி பேரளம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com