ஆம்புலன்ஸ் மோதி வியாபாரி பலி

ஆம்புலன்ஸ் மோதி வியாபாரி பலியானார்.
ஆம்புலன்ஸ் மோதி வியாபாரி பலி
Published on

நாக்பூர்,

நாக்பூரில் உள்ள சகர்தாரா பகுதியில் சம்வத்தன்று ஆம்புலன்ஸ் ஒன்று இறந்தவரின் உடலை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டது.

ஆம்புலன்ஸ் சர்தாரா பகுதியை நெருங்கியபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் தாறுமாறாக ஓடிய ஆம்புலன்ஸ் சாலையோர வியாபாரி ஒருவர் மீதும், நடந்து சென்ற ஒருவர் மீதும் மோதி நின்றது. இதில் படுகாயம் அடைந்தவர்களை அக்கம்பக்கததினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்திய பரிசோதனையில் 59 வயது சாலையோர வியாபாரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவசர கதியிலும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டிய 21 வயது ஆம்புலன்ஸ் டிரைவரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com