சொத்து தகராறில் விபரீதம்

சொத்து தகராறில் விபரீதம் மாறி, மாறி கத்தியால் குத்தியதில் கொலையான அண்ணன்-தம்பி
சொத்து தகராறில் விபரீதம்
Published on

சீனிவாசப்பூர்:

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தாலுகா பேச்சள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சந்தேமரள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷப்பா. இவரது சகோதரர் மஞ்சுநாத். இவர்கள் இருவரும் தங்கள் தந்தைக்கு சொந்தமான நிலத்தை பங்கிட்டு சாகுபடி செய்து வந்தனர். ஆண்டுதோறும் நிலத்தில் கிடைக்கும் சாகுபடியை சரிசமமாக பங்கிட்டு வந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு இடையே லாபத்தை பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் நிலத்தில் யார் பயிரிடுவது என தகராறு ஏற்பட்டது. நேற்று வெங்கடேஷப்பாவுக்கும், அவரது தம்பி மஞ்சுநாத்துக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மேலும் மாறி, மாறி கத்தியால் குத்திக் கொண்டனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுபற்றி அறிந்த சீனிவாசப்பூர் போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி சீனிவாசப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com