ரெயில் மோதி தொழிலாளி பலி

அய்யலூர் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலியானார்.
ரெயில் மோதி தொழிலாளி பலி
Published on

வடமதுரை:
அய்யலூர் அருகே கலர்பட்டி ரெயில்வே கேட்டில் இருந்து, 300 மீட்டர் தொலைவில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு நேற்று காலை தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே போலீசார் சம்பவ இடத்தக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், அய்யலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துசாமி (வயது 47) என்று தெரியவந்தது. நேற்று அதிகாலை இவர், திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ரெயில் மோதி இறந்துள்ளார்.
இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துசாமி தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com