தொழில்நுட்ப கோளாறால் ரெயில் சேவை பாதிப்பு

மும்பை போரிவிலி ரெயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ரெயில் சேவை பாதிப்பு.
தொழில்நுட்ப கோளாறால் ரெயில் சேவை பாதிப்பு
Published on

மும்பை, 

மும்பை மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் போரிவிலி ரெயில் நிலையத்தில் நேற்று காலை 6.30 மணி அளவில் 'பாயிண்ட்' தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் போரிவிலியில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதுபற்றி அறிந்த ரெயில்வே அதிகாரிகள் ஊழியர்களுடன் அங்கு சென்று தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். காலை 6.52 மணி அளவில் கோளாறை சரி செய்த பின்னர் மின்சார ரெயில்கள் 10 முதல் 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சில ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ரெயில்வே பிளாட்பாரங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் அவதி அடைந்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com