5 மாநில தேர்தல் பார்வையாளர்களுக்கு பயிற்சி; டெல்லியில் 2 நாட்கள் நடந்தது

பயிற்சி நாளில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களின் செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது.
5 மாநில தேர்தல் பார்வையாளர்களுக்கு பயிற்சி; டெல்லியில் 2 நாட்கள் நடந்தது
Published on

புதுடெல்லி,

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 5 மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெ றுகிறது. இதற்காக தேர்தல் கமிஷன் நியமித்த மத்திய பார்வையாளர்களுக்கு 2 நாள் பயிற்சி டெல்லியில் நடைபெற்றது.

இதில் 714 பொது பார்வையாளர்கள், 233 காவல் பார்வையாளர்கள் மற்றும் 497 செலவின பார்வையாளர்கள் என 1444 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது வாக்காளர் பட்டியல் தயாரித்தல், தேர்தல் நடத்துதல், செலவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகங்கள் தொடர்பான விஷயங்கள் குறித்து விளக்கப்பட்டது. மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களின் செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது.

பயிற்சி நிறைவு நாளான நேற்று தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷ னர்கள் சுக்பீர்சிங் சந்து. விவேக் ஜோஷி ஆகியோர் பங்கேற்று பயிற்சி மற்றும் விளக்கம் அளித்தனர். அத்துடன் சந்தேகங்களை நிவர்த்தி செய்தனர்.

தேர்தல் பார்வையாளர்கள் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல்களை உறுதி செய்ய வேண்டும் என ஞானேஷ் குமார் அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com