வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி

வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு “மொபைல் ஆப்“ மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது தொடர்பான வழிமுறைகள் கடைப்பிடிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி
Published on

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு மொபைல் ஆப் மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது தொடர்பான வழிமுறைகள் கடைப்பிடிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் தேசிய வாக்காளர் சேவை இணைய தளம் மூலம் விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பது குறித்தும், எதிர்கால வாக்காளர்கள் விவரங்கள் பதிவு செய்வது குறித்தும் மேலும் வாக்காளர் பட்டியலுக்கு தேவையான சான்றுகள் விவரங்கள் குறித்தும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் இருந்து 179 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். இதில் ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com