

புதுச்சேரி
புதுச்சேரி வருவாய் துறையின் கீழ் பணியாற்றி வரும் துணை தாசில்தார்கள் 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பள்ளி கல்வித்துறையில் உள்ள குலாவ் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி வரும் துணை தாசில்தார் சிவசுப்ரமணியன் ஏனாம் துணை தாசில்தார் அலுவலகத்திற்கும், காரைக்கால் துணை கலெக்டர் (வருவாய்) துணை தாசில்தார் சுசித்ரா, புதுச்சேரி நில அளவு மற்றும் பதிவேடுகள் துறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை துணை கலெக்டர் (தலைமையகம்) வினயராஜ் பிறப்பித்துள்ளார்.