திருநங்கை தீக்குளித்து தற்கொலை

காட்டுமன்னாகோவிலில் திருநங்கை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநங்கை தீக்குளித்து தற்கொலை
Published on

காட்டுமன்னார்கோவில்,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பேரரசி தெருவை சேர்ந்தவர் பார்கவி (வயது 27), திருநங்கையான இவருக்கும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த திருநங்கை இனியா என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இனியா தனது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 4 பேருடன் சேர்ந்து பார்கவியிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

தீக்குளித்து தற்கொலை

இதனால் மனமுடைந்த பார்கவி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, தனது வீட்டு முன்பு தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்து வலியால் அலறித் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று காலை பார்கவி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com