காஞ்சீபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

காஞ்சீபுரம் தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
காஞ்சீபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
Published on

காஞ்சீபுரம்,

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் காஞ்சீபுரம் தாசில்தார் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் காஞ்சீபுரத்தில் உள்ள 9 மாவட்டத்திற்கான ஒருங்கிணைந்த காதுகேளாதோர் உயர்நிலை பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com