போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

ஊட்டி

இந்தியாவில் ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், விளையாட்டு அரங்கங்களை தனியார் மயமாக்கி வரும் மத்திய அரசை கண்டித்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில், ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு எல்.பி.எப். மண்டல பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் வாகன தடை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 44 தொழிலாளர் சட்டங்களை 4 ஆக தொகுத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com