புதுவையில் மும்மதத்தினர் அமைதி ஊர்வலம்

புதுவையில் மணிப்பூர் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி மும்மதத்தினர் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
புதுவையில் மும்மதத்தினர் அமைதி ஊர்வலம்
Published on

புதுச்சேரி

மணிப்பூரில் இரு தரப்புக்கு இடையில் கடந்த மே மாதம் ஏற்பட மோதல் இன்னும் ஓயாமல் நீண்டு வருகிறது. இதனால் மணிப்பூர் கலவர பூமியாக மாறியிருக்கிறது. கலவரங்களில் இதுவரை சுமார் 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் இந்த வன்முறைகளை தடுத்த நிறுத்தவும், சிறுபான்மை கிறித்தவ மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவும், மக்கள் அமைதியாக வாழவும் வலியுறுத்தி புதுவை தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா சார்பில் அமைதி ஊர்வலம் இன்று இரவு நடைபெற்றது.

ஊர்வலத்தை பசிலிக்கா அதிபர் பிச்சைமுத்து தொடங்கி வைத்தார். இந்த இருதய ஆண்டவர் ஆலயம் முன்பு தொடங்கிய ஊர்வலம் பாரதி வீதி, புஸ்சி வீதி, காந்தி வீதி வழியாக சென்று மீண்டும் ஆலயத்திற்கு வந்து சேர்ந்தது. ஊர்வலத்தில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மற்றும் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் ஆகிய மும்மத தலைவர்கள், பெண்கள், சிறுவர்கள் கலந்துகொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com