மாமல்லபுரம் பேரூராட்சியில் பழங்குடி இருளர் பெண் முதல் முறையாக கவுன்சிலராக பதவியேற்பு

மாமல்லபுரம் பேரூராட்சியில் பழங்குடி இருளர் பெண் முதல் முறையாக அ.தி.மு.க. சார்பில் கவுன்சிலராக பதவி பிரமாணம் ஏற்றார்.
மாமல்லபுரம் பேரூராட்சியில் பழங்குடி இருளர் பெண் முதல் முறையாக கவுன்சிலராக பதவியேற்பு
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சியில் அ.தி.மு.க.வை சேர்ந்த 9 கவுன்சிலர்களும், தி.மு.க.வை சேர்ந்த 5 கவுன்சிலர்களும், ம.தி.மு.க. வை சேர்ந்த ஒரு கவுன்சிலர் என மொத்தம் 15 கவுன்சிலர்கள் நேற்று பதவிபிரமாணம் ஏற்றனர். அவர்களுக்கு மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ் பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

மாமல்லபுரம் பேரூராட்சி மன்ற வரலாற்றில் முதல், முறையாக அ.தி.மு.க. சார்பில் 10-வது வார்டான பூஞ்சேரியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்த பெண் மஞ்சு என்பவர் பதவி பிரமாணம் ஏற்றார். 5-வது பேரூராட்சி மன்றத்தில் முதல், முறையாக பழங்குடி இருளர் பெண் ஒருவர் பதவி ஏற்பது இதுவே முதல் முறையாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com