செயல்படாத தானியங்கி சிக்னலுக்கு அஞ்சலி

அரியாங்குப்பம் அருகே செயல்படாத தானியங்கி சிக்னலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
செயல்படாத தானியங்கி சிக்னலுக்கு அஞ்சலி
Published on

அரியாங்குப்பம்

புதுச்சேரி-கடலூர் இ.சி.ஆரில் அரியாங்குப்பம் அடுத்த கோட்டைமேடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னல் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் பழுதாகி காட்சிப் பொருளாக உள்ளது. இதனால் போக்குவரத்தை சீரமைக்க தெற்கு பகுதி போக்குவரத்து போலீசார் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். பகல் மற்றும் இரவு நேரத்தில் இந்த சந்திப்பில் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது. மேலும் நள்ளிரவு நேரங்களிலும் இந்த பகுதியில் வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றன. எனவே இந்த சிக்னலை சீரமைத்து செயல்பட வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் மாநில பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் அரியாங்குப்பத்தில் இன்று காலை நூதன போராட்டம் நடந்தது. அமைப்பாளர் தீனா தலைமையில் செயல்படாமல் காட்சிப் பொருளாக உள்ள தானியங்கி போக்குவரத்து சிக்னல் கம்பத்திற்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் துணை அமைப்பாளர் கர்ணா, ஒருங்கிணைப்பாளர் சந்திரன் மற்றும் பாரதி, வடிவேல், பரத் உள்பட பலர் கலந்து கொண்டனர். அடுத்த கட்டமாக தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பை தெரிவிக்கப் போவதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com