

சிவகாசி,
மாரனேரி கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் விளம்பட்டி காமராஜர் காலனியில் உள்ள காளியம்மன்கோவில் அருகில் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு ஆற்றுமணல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது தரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் தென்காசி மாவட்டம் பெருமாள்பட்டி யில் உள்ள ஒரு குவாரியில் இருந்து எம்.சாண்ட் என்ற பெயரில் அனுமதியின்றி ஆற்றுமணலை கடத்தி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஆற்றுமணலை கடத்தி வந்த லாரி மற்றும் மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாரனேரி போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.