

அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலம் அருகே நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்வகையில் வந்த டிப்பர் லாரியை நிறுத்த முயன்றபோது டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். இதையடுத்து போலீசார் லாரியை விரட்டி பிடிக்க முயன்ற போது தனியார் கல்லூரி அருகே லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். லாரியை சோதனை செய்து பார்த்த போது அதில் உரிய அனுமதியின்றி மணல் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 யூனிட் மணலையும், லாரியையும் பறிமுதல் செய்த நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசார் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.