

வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
கம்போடியா- தாய்லாந்து, கொசோவோ- செர்பியா, இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேல்- ஈரான், அர்மேனியா- அசர்பைஜான் என கடந்த ஓராண்டில் நான் 8 போர்களை நிறுத்தி உள்ளேன். உலகில் சக்தி வாய்ந்த நாடு என்றால் அது அமெரிக் காதான்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் இதே கருத்தை வாஷிங்டனில் நடந்த தேசிய பிரார்த்தனை காலை விருந்திலும் தெரிவித்தார். ஒரே நாளில் 2 முறை இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்திய தாக டிரம்ப் கூறியுள்ளார். கடந்த ஆண்டு முதல் இதுவரை 90-க்கும் மேற்பட்ட முறை இந்தியா- பாகிஸ்தான் இடையி லான போரை தான் நிறுத்தியதாக டிரம்ப் தம்பட்டம் அடித்து வருகிறார்.
இருப்பினும் இதில் மூன்றாம் தரப்பின் குறுக்கீடு இல்லை என இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து வருகிறது. இது குறித்து காங்கிரஸ் விமர்சித்து உள்ளது.
"வாஷிங்டனில் உள்ள நல்ல நண்பர் 100-வது முறையாக இந்தியா- பாகிஸ்தானை போரை தான்தான் தடுத்ததாக கூற இருக்கிறார். ஆனால் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்" என காங்கிரஸ் பொது செயலா ளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.