துல்கர் சல்மான் - காஜல் அகர்வாலின் தோழி பாடல்

பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹே சினாமிகா’ படத்தில் இடம் பெறும் தோழி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
துல்கர் சல்மான் - காஜல் அகர்வாலின் தோழி பாடல்
Published on

எண்ணற்ற திரைப்பட பாடல்களுக்கு திறம்பட நடனம் அமைத்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள பிருந்தா மாஸ்டர், ஹே சினாமிகா படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குனராகியுள்ளார்.

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில், துல்கார் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதில் துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் பங்கு பெறும் நட்பைக் கொண்டாடும் தோழி பாடல் மிகவும் அழகாக உருவாகியுள்ளது.

மதன் கார்க்கியின் வரிகளில், கோவிந்த் வசந்தாவின் இசையமைப்பில், பிரதீப் குமாரின் குரலுடன் உருவாகியுள்ள இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்று வருகிறது. ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் ஹே சினாமிகா திரைப்படம் பிப்ரவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com