டி.வி. பார்த்ததை தாயார் கண்டிப்பு, கல்லூரி மாணவி தற்கொலை

திருச்சுழி அருகே பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை கொண்டார்.
டி.வி. பார்த்ததை தாயார் கண்டிப்பு, கல்லூரி மாணவி தற்கொலை
Published on

நரிக்குடி,

திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடி கிராமம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் பூமிநாதன். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவரது 2-வது மகள் மலர் கார்த்திகைசெல்வி(வயது 19).

இவர் அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த மலர் கார்த்திகை செல்வி வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார்.

அப்போது வீட்டு வேலை பார்க்காமல் எப்போதும் டி.வி. தான் பார்த்து கொண்டிருக்கிறாய் என்று மலர் கார்த்திகைசெல்வியை அவரது தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மலர் கார்த்திகை செல்வி விஷம்குடித்து உள்ளார். அவரை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com