மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
Published on

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ஆண்டிமடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆண்டிமடம் கடைவீதி அருகே மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு மது விற்றவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், ஜெயங்கொண்டம் தோப்புத் தெருவை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 58), ஆண்டிமடம் கடைவீதியை சேர்ந்த அனுராதா(48) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.3,750-ஐ கைப்பற்றி ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com