மும்பை, வசாய் விரார் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 பேர் கைது

மும்பை, வசாய் விரார் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை, வசாய் விரார் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 பேர் கைது
Published on

வசாய், 

பால்கர் மாவட்டம் வசாய் மற்றும் விரார் பகுதியில் வழிப்பறி சம்பவம் அடிக்கடி நடந்து வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின்படி போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் 2 பேரின் அடையாளம் தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் கடந்த 26-ந்தேதி 2 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.24 லட்சத்து 8 ஆயிரம் மதிப்புள்ள நகைகளைபறிமுதல் செய்தனர்.

இவர்கள் மும்பை உள்பட வசாய், விரார் போன்ற இடங்களில் 17 வழக்குகள் தொடர்பு இருப்பதாக போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com