திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் உதய கருட சேவை

சவுரிராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் உதய கருட சேவை
Published on

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் உதய கருட சேவை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு உதய கருட சேவை இன்று நடைபெற்றது. இதையொட்டி பெருமாள் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் எழுந்தருளி, பவளக்கால் சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைதொடர்ந்து கோவிலின் எதிரே உள்ள தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் குணசேகரன், தக்கார் மணிகண்டன், கோவில் தலைமை கணக்கர் உமா உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com