வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுவையில் பணி நியமனத்தின் போது வயது நிர்ணயத்தை ரத்து செய்யக்கோரி வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

புதுச்சேரி

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை பழைய பஸ்நிலையம் அருகே ஆரப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் அதோனிஸ் தலைமை தாங்கினார். இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மாணவர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் சாமிநாதன், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவன தலைவர் மங்கையர் செல்வன் மற்றும் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேல்நிலை ஆசிரியர் பணி இடங்களை நேரடியாக நியமனம் செய்ய வேண்டும். ஆசிரியர் பணி நியமனத்தில் வயது வரம்பை ரத்து செய்ய வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com