அடையாளம் தெரியாத ஆண் பிணம்

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் அண்ணா சிலை அருகில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கண்டெடுக்கப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் தெரியாத ஆண் பிணம்
Published on

புதுச்சேரி

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் அண்ணா சிலை அருகில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸபத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதே போல் புதுச்சேரி பாதர் சாஹிப் வீதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து இறந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com