திருவள்ளூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்

திருவள்ளூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
திருவள்ளூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கி அருகே நேற்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இறந்த நபர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை. இது குறித்து வெங்கத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி மணவாள நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com