மத்திய பட்ஜெட்: ராணுவத்துக்கு ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கீடு


மத்திய பட்ஜெட்: ராணுவத்துக்கு ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கீடு
x

கோப்புப்படம்

மத்திய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.5 லட்சத்து 94 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

முந்தைய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்கப்பட்டு இருந்தது.

நேற்றைய பட்ஜெட்டில், ராணுவத்துக்கு ரூ.5 லட்சத்து 94 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ராணுவத்துக்கான மூலதன செலவினத்துக்கு ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. புதிய ஆயுதங்கள், விமானங்கள், போர்க்கப்பல்கள், இதர ராணுவ தளவாடங்கள் வாங்க இத்தொகை பயன்படுத்திக்கொள்ளப்படும்.

வருவாய் செலவினத்துக்கு ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்து 120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சம்பள செலவுகள், பராமரிப்பு செலவுகள் உள்ளிட்ட செலவுகளுக்கு இத்தொகை பயன்படுத்திக்கொள்ளப்படும்.

ஓய்வூதியம்

பாதுகாப்பு அமைச்சகத்துக்கு (சிவில்) மூலதன ஒதுக்கீடாக ரூ.8 ஆயிரத்து 774 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறை ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கு தனியாக ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் வருவாய் செலவினமாக ரூ.4 லட்சத்து 22 ஆயிரத்து 162 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story