பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

புதுவை பல்கலைக்கழக துணைவேந்தரை பணிநீக்கம் செய்யக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

காலாப்பட்டு

புதுவை பல்கலைக்கழக துணைவேந்தரை பணிநீக்கம் செய்யக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சி.பி.ஐ. விசாரணை

புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் ஊழல் செய்தவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டு அவர்களை நிர்வாக ரீதியான நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் ஆனந்த் தொடர்ந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

துணைவேந்தர் மீது ஐகோர்ட்டு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பா.ஜ.க. உள்பட அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. துணை வேந்தருக்கு எதிராக மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம்

துணைவேந்தர் குர்மீத் சிங்கை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் புதுவை கிளை சார்பாக பல்கலைக்கழகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டததில் இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் பிரவீன்குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் அபிஜித், அப்பு உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்கள் துணைவேந்தரை மத்திய அரசு பணிநீக்கம் செய்யவேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com