வானம் கொட்டட்டும்

தனசேகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் முன்னோட்டம்.
வானம் கொட்டட்டும்
Published on: 

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் வானம் கொட்டட்டும். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். விக்ரம் பிரபுவுக்கு சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.


நீண்ட இடைவெளிக்கு பின் சரத்குமாரும், ராதிகாவும் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றனர். மணிரத்னம் கதை எழுதி தயாரிக்கும் இந்தப் படத்தை அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தனசேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக பிரபல படகர் சித் ஸ்ரீராம் அறிமுகமாகிறார்.

X