'வாத்தி' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.. பிறந்த நாள் ஸ்பெஷலாக டீசர் ரிலீஸ்..

தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
'வாத்தி' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.. பிறந்த நாள் ஸ்பெஷலாக டீசர் ரிலீஸ்..
Published on

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்நிலையில் 'வாத்தி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஒரு விரிவுரையாளராக தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தின் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்துவதாக இருக்கிறது.

தனுஷின் பிறந்தநாள் விருந்தாக ரசிகர்களுக்கு இப்படத்தின் டீசர் 28-ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com