புதுச்சேரியில் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி - தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

புதுச்சேரியில் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி - தமிழிசை சவுந்தரராஜன் தகவல்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் ரோட்டரி அமைப்பு சார்பில் பெண்களுக்கு எரிவாயு மூலம் பயன்படுத்தப்படும் இஸ்திரி பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனா தொற்றுக்கு எதிராக போராடும் வகையில், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அதே சமயம் புதுச்சேரியில் நாள் ஒன்றுக்கு சுமார் 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com