தர்மபுரி மாவட்டம் முழுவதும் 2,61,271 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தர்மபுரி மாவட்டம் முழுவதும் 2,61,271 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் முழுவதும் 2,61,271 பேருக்கு கொரோனா தடுப்பூசி
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி வரை 2,25,457 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 35,814 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன. இதன்படி மாவட்டம் முழுவதும் 2,61,271 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிகளும் அடங்கும். தடுப்பூசியின் வருகைக்கு ஏற்ப தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com