வைணவ நவக்கிரக தலங்கள்

வைணவ நவக்கிரக தலங்களில் கிரக அமைப்புக்கு என்று சன்னதி இல்லை. பெருமாளே இங்கு கிரகங்களுக்கு உரிய அம்சங்களுடன் வீற்றிருந்து செயல்படுகிறார்.
வைணவ நவக்கிரக தலங்கள்
Published on

சைவ சமய நவக்கிரக தலங்கள் சோழ மண்டலத்தில் அமைந்திருப்பது போன்றே வைணவ நவகிரக தலங்களும் சோழ மண்டலத்தில் அமைந்துள்ளன. அந்த வைணவ நவக்கிரக தலங்கள் வருமாறு:

1. சூரியன்-ஸ்ரீசாரங்கபாணி ஆலயம், கும்பகோணம்.

2. சந்திரன் - ஜெகன்னாதர் ஆலயம், ஸ்ரீ நாதன்கோவில்.

3. செவ்வாய்- சீனிவாச பெருமாள் கோவில், நாச்சியார் கோவில் (திருநறையூர்)

4. புதன் - வல்வில் ராமர் ஆலயம் திருபுள்ளம்பூதங்குடி

5. வியாழன் - ஆண்டளக்கும் அய்யன்பெருமாள் ஆலயம், திருஆதனூர்.

6. சுக்கிரன்- கோலவல்வில்ராமர் ஆலயம், திருவெள்ளியங்குடி

7. சனி- ஒப்பிலியப்பன் பெருமாள் ஆலயம், உப்பிலியப்பன் கோவில் (திருவிண்ணகர்)

8. ராகு- கஜேந்திர வரதர் ஆலயம், கபிஸ்தலம்

9. கேது- ஜெகத்ரட்சகன் கோவில், திருக்கூடலூர் 

இந்த 9 வைணவத் தலங்களிலும் கிரக அமைப்புக்கு என்று சன்னதி இல்லை. பெருமாளே இங்கு கிரகங்களுக்கு உரிய அம்சங்களுடன் வீற்றிருந்து செயல்படுகிறார். கும்பகோணத்திலிருந்து ஒன்பது கோவில்களையும் எளிதில் சென்றடைந்து தரிசனம் செய்யலாம். இந்த பட்டியலில், சனி பகவானின் மகனான மாந்தியைக் குறிக்கும் திருச்சேறை சாரநாத பெருமாள் கோவிலையும் சேர்த்துக்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com