அலங்காநல்லூர் வெக்காளியம்மன் கோவிலில் வளைகாப்பு விழா

வளைகாப்பு விழாவில் அலங்காநல்லூர் மற்றும் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அலங்காநல்லூர் வெக்காளியம்மன் கோவிலில் வளைகாப்பு விழா
Published on

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுக்கடையில் அமைந்துள்ள ஸ்ரீ வெக்காளியம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவ விழாவையொட்டி வளைகாப்பு விழா நடந்தது. இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட 16 வகை ஹோமங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் செய்து வளைகாப்பு விழா நடைபெற்றது. உலக மக்கள் நன்மை வேண்டி மாலையில் 108 திருவிளக்கு பூஜையும் நடந்தது.

இந்நிகழ்ச்சிகளில் அலங்காநல்லூர் மற்றும் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு பூஜை மலர்கள், வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com