லாரி மோதி வாலிபர் பலி; மற்றொருவர் படுகாயம்

லாரி மோதி வாலிபர் பலி; மற்றொருவர் படுகாயம்
லாரி மோதி வாலிபர் பலி; மற்றொருவர் படுகாயம்
Published on

முசிறி,ஜன.22-
திருச்சி பீமநகர் கண்டி தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் சுரேந்தர் (வயது 23). இவரும் கல்லுகுழியை சேர்ந்த சூர்யா என்பவரும் முசிறியில் உள்ள நண்பர் வினோத்தின் தந்தை இறப்பிற்கு வந்துவிட்டு மீண்டும் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். வெள்ளூர் அருகே, சென்ற போது, எதிரே வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்த சுரேந்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னால் உட்கார்ந்திருந்த சூர்யாவுக்கு படுகாயம் ஏற்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்குமேல்சிகிச்சைக்காகஅனுப்பிவைக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com