ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் பலி

திருவரங்குளம் அருகே ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் பலியானார்.
ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் பலி
Published on

திருவரங்குளம்,ஜூலை.1-
திருவரங்குளம் அருகே ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் பலியானார்.
ஆம்புலன்ஸ் மோதியது
திருவரங்குளம் அருகே உள்ள மாங்கனாம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 21). இவரும் அதே ஊரை சேர்ந்த செல்லத்துரை மகன் ரமேஷ் (22) என்பவரும் கூலி வேலைக்கு சென்றுவிட்டு செட்டியபட்டி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த தனியார் ஆம்புலன்ஸ் அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார்.
தீவிர சிகிச்சை
இதைத்தாடர்ந்து ரமேஷ் முதலுதவி சிகிச்சைக்கு பின் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com