கார் மோதி வாலிபர் பலி

கார் மோதி வாலிபர் பலி
கார் மோதி வாலிபர் பலி
Published on

நவல்பட்டு,பிப்.16-
மணிகண்டத்தை அடுத்த முள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் செல்வம் (வயது 35). இவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மனோஜ் (20), புதுக்கோட்டை வங்காரம் பட்டியைச் சேர்ந்த ஜீவானந்தம் (23) ஆகியோர் தஞ்சாவூருக்கு சென்றுவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். கும்பகுடி அருகே உள்ள பூங்கா நகர் அருகே வந்தபோது, பின்னால் வந்த கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு செல்வம் சிகிச்சை பலனின்றி இறந்தார். மனோஜ், ஜீவானந்தம் ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com