ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய வாணி போஜன்

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் வாணி போஜன், ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி இருக்கிறார்.
ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய வாணி போஜன்
Published on

நடிகைகளில் தொலைக்காட்சியில் அறிமுகமாகி பெரிய திரையில் பரபரப்பாக இருப்பவர்களில் முக்கியமானவர் வாணி போஜன். இவர் இளம் கதாநாயகர்களுடன் அதிக படங்களில் ஒப்பந்தமாக்கியிருக்கிறார். சமீபத்தில் சென்னையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடினார்.

நிகழ்வில் நடிகை வாணி போஜன் பேசியபோது, இன்று இந்த குழந்தைகளுடன் கொண்டாடிய தீபாவளி என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும். இந்த தீபாவளியை இது போல் ஆதரவற்றவர்களுடன் எல்லோரும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com