வேலைக்காரன்

`வேலைக்காரன்' படத்தின் உரிமையை வாங்கிய பிரபல தொலைக்காட்சி மோகன் ராஜா இயக்கத்தில்
வேலைக்காரன்
Published on

சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடித்துள்ள `வேலைக்காரன்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. `தனி ஒருவன்' பட வெற்றியை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கியிருக்கும் படம் `வேலைக்காரன்'. சமூக பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா முதல்முறையாக இணைந்திருக்கின்றனர்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வில்லனாக மலையான நடிகர் பகத் பாஸில் தமிழில் அறிமுகமாகிறார்.

சென்னை மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, தற்போது இறுதிக்கட்ட பணியில் இருக்கும் `வேலைக்காரன்' படத்தை 24 ஏ.எம். நிறுவனம் சார்பில் ராஜா தயாரித்திருக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com