``கலெக்டர் இடத்தில் நான் இருந்தால் பல்லைத் தட்டியிருப்பேன்``- அபூர்வா அதிரடி

எம்.ஜி.ஆர்.தொடங்கி ஸ்டாலின் வரையிலான முதல் அமைச்சர்களுடனான தனது அனுபவம் குறித்தும் பல சுவாரசியமான தகவல்களைக் கூறியுள்ளார் முன்னாள் கலெக்டர் அபூர்வா.

சமீபத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர், பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. சமூக வலைத்தளங்களில் இது பெரும் வைரலாகப் பரவியது.

பல்லைத் தட்டியிருப்பேன்

ஆபாச குறுஞ்செய்தி குற்றச்சாட்டுக்கு ஆளான சட்டமன்ற உறுப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பில் இருந்து குரல் எழுந்து வரும் நேரத்தில், `அந்தப் பெண் கலெக்டர் இடத்தில் நான் இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு, அந்த நபரின் பல்லைத் தட்டிக் கையில் கொடுத்திருப்பேன்` என்று அதிரடியாகப் பதிலளித்துள்ளார் முன்னாள் கலெக்டர் அபூர்வா.

தான் பொறுப்பு வகித்து வந்த காலத்தில் தன்னைப் பற்றி கமெண்ட் அடித்த பிரமுகர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, சிறு வயதிலேயே தன்னைக் கேலி செய்தவர்களுக்கு எவ்வாறு பதிலடி கொடுத்தேன், தனது பதவிக்காலத்தில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் என்னென்ன என பல்வேறு விஷயங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார் அபூர்வா.

எம்.ஜி.ஆர்.தொடங்கி ஸ்டாலின் வரையிலான முதல்- அமைச்சர்களுடனான தனது அனுபவம் குறித்தும் பல சுவாரசியமான தகவல்களைக் கூறியுள்ளார். அவை அனைத்தையும் தெரிந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கைக் கிளிக் செய்யவும்.

வீடியோ: https://www.youtube.com/watch?v=mNvLEWzWCG0

X